தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு! – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட நிகழ்வொன்றிற்கு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

மும்மை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு நிகழ்வுகளில் ஜஸ்ரின் ரூடோ கலந்துகொண்டார்.

அவற்றில், மும்பையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ‘ஜஸ்வல் அத்வால்’ (Jaswal Atwal) எனப்படும் முன்னாள் தீவிரவாத அமைப்பொன்றின் செயற்பாட்டாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவருக்கு அழைப்பு விடுத்தவர் மற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பினரே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இச்செயற்பாடு கனடாவை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதென்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவத்திற்குப் பின்னர், இன்று இரவு டெல்லியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இராப்போசன நிகழ்வையும் கனேடியப் பிரதமர் தவிர்த்துள்ளார்.

‘ஜஸ்வால் அடல்வால்’ எனப்படுபவர் கடந்த 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட சர்வதேச தீவிரவாத இயக்கமொன்றில் செயற்பட்டவர் என்பதுடன், 20 வருடங்களுக்கு மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்