பகிரங்க வாக்கெடுப்பையே கோருவோம் என்கிறது – கூட்டமைப்பு!

தொங்கு நிலை­யில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் தெரி­வு­க­ளின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதை எதிர்க்­கும். எந்­த­வொரு விட­ய­மும் மக்­க­ளுக்­குத் தெரிந்து பகி­ரங்­க­மாக இடம் பெறவேண்டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நேற்­றுப் பகல் நடை­பெற்­றது. அதில் இந்த விட­யம் ஆரா­யப்­பட்டு முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்று அவர் கூறி­னார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­க­ளின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கோரும் என்று அந்­தக் கட்­சி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தி­ருந்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, இர­க­சிய வாக்­கெ­டுப்­புக் கோரு­வதை எதிர்ப்­ப­தற்கு முடிவு செய்­துள்­ளது.

“யாரு­டன் கூட்­டுச் சேர்­வது என்­பது தொடர்­பில் வெளிப்­ப­டைத்­தன்மை இருக்­க­வேண்­டும். நாங்கள் இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்கு இணங்­க­மாட்­டோம். ஏனை­யோ­ரும் இர­க­சிய வாக்­கெ­டுப்­புக் கோரக் கூடாது என்­ப­து­தான் எங்­க­ளின் நிலைப்­பாடு. மக்­க­ளின் வாக்­கு­க­ளால் வந்த முத­லா­வது கூட்­டத்­தி­லேயே, மக்­க­ளுக்­குத் தெரி­யா­மல் ஒழித்து பேரம்­பேசி வாங்கி விற்று அர­சி­யல் நடத்­து­வது மிக மிகக் கேவ­ல­மான விட­யம். யார் யாரு­டன் கூட்­டுச் சேர்­கின்­றார்­கள் என்­பது மக்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும். இர­க­சிய வாக்­கெ­டுப்பை நாங்­கள் கோர­வும் மாட்­டோம். இர­க­சிய வாக்­கெ­டுப்­புக் கோரி­னால் நாங்­கள் அதனை எதிர்ப்­போம்” -என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்