பிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார்

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பதவிகாலம் முடிந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமை.

இன்னொரு நாட்டின் சட்டத்தின் கீழ், தமது கடமைகளை அவர் நிறைவேற்றும் போது, அவரது பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை.

இந்த விடயங்கள் குகறித்துப் பேசவே அவரை அழைத்தேன். கொழும்பு திரும்பியதும் அவரைச் சந்தித்து நான் பேசுவேன்.

அவர் சிறிலங்காவுக்குத் திருப்பி அழைக்கப்படவில்லை. ஏனென்றால் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது.

அவரது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத்
ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் இருந்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*