ஐங்கரநேசனை மத்தியகுழுவில் சேர்க்க தமிழ் மக்கள் பேரவைக்குள் எதிர்ப்பு!

தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு­வில், வடக்கு மாகாண முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனை இணைப்­ப­தற்கு மூத்த சட்­டத்­த­ரணி வி.புவி­த­ரன் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளார். தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம் யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரால், பொ.ஐங்­க­ர­நே­சன், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.அருந்­த­வ­பா­லன் ஆகி­யோரை பேர­வை­யின் மத்­திய குழு­வில் இணைப்­ப­தற்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

அனந்தி சசி­த­ரன், க.அருந்­த­வ­பா­லன் ஆகி­யோர் நேற்­றைய கூட்­டத்­தில் பங்­கேற்­றி­ருக்­காத நிலை­யில் பொ.ஐங்­க­ர­நே­சன் மாத்­தி­ரம் கலந்து கொண்­டி­ருந்­தார். அவரை பேர­வை­யின் மத்­திய குழு­வில் இணைப்­ப­தற்கே மூத்த சட்­டத்­த­ரணி வி.புவி­த­ரன் எதிர்ப்­புத் தெரி­வித்­தார். பேர­வை­யின் மத்­திய குழு­வில் ஒரு­வரை இணைத்­துக் கொள்­வ­தற்கு முன்­ன­தாக பேர­வை­யின் கூட்­டம் நடத்­தப்­ப­டும். அதில் ஆரா­யப்­பட்ட பின்­னரே மத்­திய குழு­வில் ஒரு­வரை இணைத்­துக் கொள்ள முடி­யும்.

ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், நேர­டி­யாக மத்­திய குழுக் கூட்­டத்­திற்கு அழைத்து வந்­தமை தொடர்­பி­லும், அவ­ரது தெரிவு தொடர்­பி­லும் சட்­டத்­த­ரணி புவி­த­ரன் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளார். இனி­மேல் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டாம் என்­றும் அவர் கூட்­டத்­தில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்