வாதரவத்தையில் சமூக சேவைகள் அமையம் ஒன்று  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து  சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று  அங்குரார்ப்பணம்  செய்து வைத்தனர் ,ஆசிரியர் பத்மதாசன் தலைமையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இவ் நிகழ்வு  அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது .

 இவ் நிகழ்வில்  வாதரவத்தையின் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாணவர்களுக்கு  ஊக்குவிப்பாக இருப்பதும் , அமைப்பினூடாக மாணவர்களுக்கு கற்றல் உதவிகளை வழங்குவதும் பிரதான நோக்காக இவ் அமைப்பு  செயற்படும் என்றும் கல்வி நிலையம் ஒன்றை அப்பிரதேசத்தில் நிறுவி , கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளளலாம்என்றும்  தீர்மானிக்கப்பட்டது .இதேவேளை வாதரவத்தை மாணவர்கள் மேலதிக கற்றல் நடவடிக்கைகளுக்கு அயல் பிரதேசங்களுக்கு  சென்று கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதோடு , அப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகளும் குன்றிய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

இதேவேளையில் வடமாகாண சமூக சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அண்மையில் வாதரவத்தைக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

நிகழ்வில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் பங்குபற்றியிருந்தனர்

மறுமொழி இடவும்