பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம் : ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும், இயன்றவரை நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை சபையின் கேட்போர் கூடத்தில் ஆணையாளர் அவர்கள் அரசுசார அமைப்புக்களை சந்தித்த கருதுப்பரிமாற்றங்களை நிகழ்த்தியிருந்தார்.

இதில் பங்கெடுத்திருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மணிவண்ணன் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே ஆணையாளர் மேற்சொன்ன கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஆணையாளர் அவர்களும், ஆணையாளர் அலுவலகம் வெளிப்படுத்தியிருந்த காத்திரமான நடவடிக்கைகளுக்கு நன்றியைத் தெரிவித்திருந்த அமைச்சர் மணிணவண்ணன் அவர்கள், நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உதாசீனம் செய்து வருகின்றது.

தற்போதும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது பேரினவாத சக்திகளின் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. காணமல் ஆக்கப்பட்டவர்களுக்னெ சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ள அலுவலக நியமனங்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களின் நிலைப்பாடு என்னவென ஆணையாளரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் அவர்கள், இலங்கையின் மனித உரிமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் இருப்பதாகவும், நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான அழுத்தங்களை தாம் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 28.2.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா
இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால்எந்தவிதமான தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஆகவே, இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*