நாளை குதிக்கின்றது தமிழரசின் புதிய சுதந்திரன்?

இணைய மற்றும் சமூக ஊடகங்கள் நடத்திவரும் கடுமையான விமர்சனங்களைஎதிர்கொள்ளவும் தமக்கான ஆதரவு தளத்தை பலப்படுத்தவும் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புதிய சுதந்திரன் நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளராட்சி மன்ற தேர்தலில் தமக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணமாக ஒரளவு படித்த தரப்பிடையே புழக்கத்திலுள்ள இணையபயன்பாடே காரணமென தமிழரசுக்கட்சி கருதுகின்றது.

இதனால் இணைய மற்றும் சமூக ஊடகங்களை எதிர்கொள்ள உரிய பொறிமுறை தேவையென எம்.ஏ.சுமந்திரனிற்கு ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களது சத்தியபிரமாண நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வின் போது புதிய இணையத்தளமான புதிய சுதந்திரனை அங்குரார்ப்பணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்