காணாமல்போன மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது கடற்படை உதவியை நாடவும் தீர்மானம்.

முல்லைத்தீவு- நாயற்று கடலில் தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 12ம் திகதி நாயாறு கிராமத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவே

ல் மிரண்டா, 24 வயதான மிதுறதன் மிரண்டா என்ற 3 பேர் காணாமல்போயுள்ளனர். 12ம் திகதி சீரற்ற காலநிi ல நிலவியதால் இவர்கள் கடலில் மூழ்கியி

ருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நேற்று காலை தொடக்கம் மேற்படி மீனவர்களை தேடும் பணிகள் ஆரம்பி க்கப்பட்டிருந்த நிலையில் எந்தவொரு தக

வலும் இதுவரை கிடைக்கவில்லை. இதேபோல் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முல்லைத்தீவு மாவ ட்டத்தை சேர்ந்த மீனவர்களே ஈடுபட்டிரு

க்கின்றார்கள். மேற்படி மீனவர்கள் காணாமல்போனமை தொடர்பாக கடற்படையின் கவனத்திற்கு கொண்டுவந் தபோதும் கடற்படையினர் அது தொடர்பில்

அக்கறை காட்டவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதேபோல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரி வின் ஊடாக மாவட்ட செயலருக்கு விடுக்க

ப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் காணாமல்போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படை விமானத்தின் உத வியை கோருவதற்கு மாவட்ட செயலர் தீர்

மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்