இலங்கை தமிழ் அகதிகளை ரொஹிங்யா முஸ்லிம்களுடன் ஒப்பிடமுடியாது-இந்தியா

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்யா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில், இந்தியமத்திய அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், “இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போலாகும்.

இந்தியா – சிறிலங்கா இடையே 1964 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. நேற்றுமுன்தினம்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா
சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*