தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே முஸ்லீம்கள் மீது வன்முறை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

சிங்கள இனவாத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை ஜெனீவாவில் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கண்டித்தும், அதனை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையில் பக்க நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மணிவண்ணன், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழ் பேசும் முஸ்லீம்கள் சிங்கள இனவாதத்தினால் தாக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

1956,1977,1983 என தமிழ்கள் மீது சிங்கள இனவாதம் கட்டவிழ்த்த வன்முறைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் மணிவண்ணன், அதன் தொடர்சியாகவே தற்போதை முஸ்லீம்கள் மீதான வன்முறையாக உள்ளதென தெரிவித்திருந்தார்.

குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படாத நிலை, மேலதிக் குற்றங்களை இழைப்பதத்து தூண்டுகின்றது என குற்றஞ்சாட்டிய அமைச்சர், சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்