கைது செய்யப்படவுள்ள பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க்!

பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் பயனர்கள் 50 ஆயிரம் பேரின் தகவல்களை திருடியதால் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் மீது பயனர்கள் 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடிய குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக விளக்கம் அளிக்கும்படி மார்க்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமன்றி பிரிட்டனிலும் தகவல் தொடர்பு ஆணையாளர் எலிசபெத் டென்ஹாம் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பெற்றுள்ளார். இதனால் பேஸ்புக் நிறுவனம் மீதும். தலைமையகம் மீதும் சோதனை இடம்பெறவுள்ளது. இச் சோதனையை அடுத்து பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்