இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசர கால சட்டம் நீக்கம்!

இலங்கையில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் சிறீலங்கா ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, சிறீலங்கா ஜனாதிபதிக்குஉள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி இந்த சட்டம்அமுலாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மேல் நீடிப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் அனுமதிபெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த சட்டத்தை ரத்து செய்ய சிறீலங்கா ஜனாதிபதி தீர்மானித்து, அதற்கானஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சுமுகமான சூழ்நிலை கருதி இந்த தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்