அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்!

அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஏப்ரல் 2ம் தேதி, தமிழகம் முழுக்க அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்று அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து, டிடிவி தினகரன் இன்று மாலை அளித்த பேட்டியில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்றார். வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க, அதிமுக அரசால் முடியவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

அதேநேரம், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க திமுக அழைத்தால் பரிசீலிப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சில தினங்கள் முன்பாக தஞ்சையில் தினகரன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு
மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில்
தஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன், சசிகலாவால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*