பேரணி மீது துப்பாக்கிச்சூடு-16 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் எல்லை அருகே பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான காசா நகரவாசிகளை கலைக்க நடந்த தாக்குதலில் 16 பேர் பலியாகினர். இஸ்ரேல் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியருகே பாலஸ்தீனத்தின் காசா நகரவாசிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். இதில் கிழக்கு மற்றும் வடக்கு எல்லையை சுற்றிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 758க்கும் கூடுதலானோர் துப்பாக்கி சூட்டிலும் மற்றவர்கள் ரப்பர் புல்லட்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றால் காயமடைந்து உள்ளனர்.

இதபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்பொழுது, எல்லைக்குள் ஊடுருவ அல்லது தாக்குதல்களை நடத்துவதற்காக இந்த போராட்டத்தினை தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இது அமைதியான போராட்டம் இல்லை. இந்த போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்