ஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு

ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

மாலியில் ஐ.நா அமைதிப்படை தொடரணிக்கு சிறிலங்கா இராணுவத்தின் 200 பேர் கொண்ட அணி ஒன்று வழித்துணை வழங்கி வருகிறது.

மொப்ரி நகர் நோக்கி பயணித்த சிறிலங்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து 35 கிலோ எடையுள்ள பாரிய கிளைமோர் குண்டு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

இதனை சிறிலங்கா இராணுவத்தினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

அத்துடன் அதனை வெடிக்க வைப்பதற்காக தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவியுடன் காத்திருந்த தீவிரவாதி ஒருவரையும் கைது செய்து மாலி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்