சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு!

கர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக – இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ரவு வழங்­கும் என்று கூறப்படுகிறது. ‘தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்­வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­பதற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆத­ர­வ­ளிப்­போம்’ என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணத்­தின் கர­வெட்டி பிர­தேச சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 9 ஆச­னங்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் தலா 7 ஆச­னங்­க­ளும், ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சிக்கு 2 ஆச­னங்­க­ளும் உள்­ளது.

கர­வெட்டி பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது. ஏனைய கட்­சி­க­ளு­டன் பேச்­சுக்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றது. இதே­வேளை, வவு­னியா மாவட்­டத்­தின் வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் 26 ஆச­னங்­க­ளில், 12 ஆச­னங்­கள் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளு­டை­யது. எஞ்­சிய 14 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 8 ஆச­னங்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும் உள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, தெற்கு கட்­சி­கள் ஆட்சி அமைப்­பதை தடுப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­ட­னும் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பது மீண்டும் அம்பலமாகியிருப்பதாக
உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*