சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறது?

இலங்ககையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் இரா. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சவால் விடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்து பிரதமரை தோற்கடித்தால் ஆட்சி மாற்றம் இடம்பெறும் எனவும் அதன் போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனிடமிருந்து பறி போகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்யும் வகையில் சம்பந்தன் தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சம்பந்தன் நீடிக்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சி சம்பந்தனுக்கு சவால் விடுக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம், தார்மீக ரீதியில் எதிர்க்கட்சியில் நீடிக்க சம்பந்தனுக்கு தகுதியில்லை என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.

இதன்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் வெற்றியீட்டினாலும், தோல்வியடைந்தாலும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் நிலைமை நீடித்து வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயாதீனத்தன்மை உறுதி செய்ய வேண்டுமாயின் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது வாக்குகளை அளிக்காமல் விடுவது சாலச் சிறந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்