இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய 3 படகுகள்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கா ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரில், புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டனர்.

சில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்கக் கடற்படை வருவதாக இருந்தது என்ற செய்தி அரசல் புரசலாக வெளியாகி வந்தது. ஆனால் அது உண்மை என்றும், சிலர் அதனைப் பொய் என்றும் கூறிவந்த நிலையில். மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி, லண்டனில் அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் , அமெரிக்காவில் ஹிலரி கிளிங்ரனைத் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலரை காப்பாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்காவில் ராஜாங்க மட்டத்தில் உள்ள சிலர், இது தொடர்பாக முன்னரே ஆராயத் தொடங்கி இருந்தார்கள் என்பது, தற்போது வெளியாகியுள்ல ஹிலரி கிளிங்ரனின் ஈமெயில்களில் இருந்து தெரியவருகிறது.

காயப்பட்ட மக்களை அப்புறப்படுத்த ஒரு கப்பலை அனுப்புமாறு அமெரிக்கா கட்டளையிட்டது. அப்போதைய பசுபிக் கட்டளைத் தளபதியாக இருந்த அடாம்ஸ் றொபேட் என்பவர், இதற்காக ஆயத்தங்களை செய்திருந்தார். இதேவேளை நியூடெல்லியில் உள்ள தலைமை புலிகள் முற்றாக அழியவேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால் இலங்கையில் பிரச்சினை தீர்ந்தால் பல நாடுகளின் தலையீடு அங்கே மூக்கை நுளைக்கும் என்று புரிந்துகொண்ட அமெரிக்கா, பிரபாகரனை எவ்வாறாயினும் காப்பாற்றி வெளியேற்றினால்.
பின்னர் மீண்டும் சில வருடங்கள் கழித்து போராட்டம் தானாக ஆரம்பித்து விடும் என்று கருதியுள்ளது. இது அமெரிக்காவின் ஆசிய பிராந்திய , பொறுப்பு அதிகாரிகளின் யோசனையாக இருக்க. இதற்கு வலுச்சேர்த்துள்ளார் கிலரி.

இதற்கு அமைவாக , சி.என்.எஸ் 1 என்ற சிறிய ரக கப்பல் ஒன்று முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பப்பட தயாராக இருந்துள்ளது. மக்களைக் காப்பாற்ற என செல்லும் படகில், புலிகள் தலைவர்கள் சிலர் தப்பிக்க உள்ளதாக சோனியாவின் தலைமையில் இருந்த இந்திய மத்திய அரசுக்கு தெரியவரவே.

உடனடியாக அன் நாளில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன் இவ்விடையத்தை மகிந்தவுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

இதனால் இதற்கு மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க. உடனடியாக ஹிலரி கிளிங்ரன், பன்னாட்டு நாணய நிதியத்திற்கு, இலங்கைக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளையைப் பிறப்பித்தார்.

இதுவும் ஹிலரி கிளிங்ரன் ஈமெயில் மூலம் அனுப்பிய தகவலில் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியது. இதனிடையே நோர்வேயும் தலைவர் பிரபாகரனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கைக்கு , அமெரிக்கத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது

இதனிடையே அமெரிக்க சி.ஐ.ஏ உளவுப் பிரிவின் உதவியோடு, அமெரிக்க அதிகாரி ஒருவர் புலிகளின் முக்கிய தொடர்பாடல் உறுப்பினர் ஒருவரோடு பேசியும் உள்ளார். தாம் சமாதானம் ஒன்றை கொண்டுவர முயற்ச்சி செய்வதாகவும். இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதன் கரணத்தால், இந்தியாவில் உள்ள சிதம்பரத்தை புலிகளின் முக்கியஸ்தர்கள் அணுகி உதவிகளைக் கோரியுள்ளார்கள். இருப்பினும் சோனியா மறுத்து விட்டதாக அறியப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் ஹிலரி கிளிங்ரன் கடும் ஆத்திரமடைந்ததாகவும், இலங்கை மீது மேலும் பல அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து கூறியுள்ளார்.

அமெரிக்கா என்ன தடைகளை கொண்டு வந்தாலும், அதனை நிவர்த்திசெய்ய தாம் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனை அடுத்தே போரை உக்கிரப்படுத்தி சில தினங்களில் முடித்துவிடும்படி இந்தியா கூறியதோடு தனது அனுபவம் மிக்க ராணுவ தளபதிகள் சிலரை பலாலிக்கு அனுப்பியும் உள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அது புலிகளுக்கு எதிராக இருந்தாலும். தனது சொந்த நலனிற்காக அது, ஒரு காலத்தில் புலிகளின் தலைமையை காக்க முனைந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இதனை சிவசங்கர் மேனன் அவர்கள் தான் எழுதி வெளியிட்டுள்ள நூலில் தற்போது மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவு போல இருந்து வந்த ரணில். தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ள நிலை, இந்தியாவையும் அமெரிக்காவையும் கடும் அதிருப்த்தியினுள் தள்ளியுள்ளது. இதன் காரணத்தால் தற்போது குழம்பிப்போயுள்ள மைத்திரி, ரணிலோடு நேரடி மோதலில் ஈடுபட ஆரம்பித்து விட்டதாக கொழும்புச் செய்திகள் குறிப்பிடுகிறது.

இதன் காரணமாகவே சமீபத்தில் இந்தியாவோடு பகைக்க வேண்டாம் என்று, மகிந்த ராஜபக்ச நேரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் பார்வை மகிந்த ராஜபக்ச பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே அடுத்தது என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. பசுபிக் கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்கக் கப்பல் படையில் இருந்து, முள்ளிவாய்க்காலுக்கு வர இருந்த கப்பல் இறுதிவரை வரவே இல்லை.

இது அமெரிக்க ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது. புலிகள் கடல் வழியாக தப்பிவிடக் கூடாது என்பத்காகவும். அமெரிக்க கப்பலைத் தடுக்கவுமே இந்தியா தனது கடல்படை கப்பல்கள் பலவற்றை மே மாதம் 4 ஆம் திகதி முதல் இந்தியப் பெருங்கடலில் நிற்க்கவிட்டது. இருப்பினும் இதனை மீறியும் மே 16 இரவு தாக்குதல் நடத்திக்கொண்டு புலிகளின் படகுகள் சில வெளியேற முயன்றது.

ஆனால் இதில் போன 3 படகுகளில் எத்தனை படகு தப்பியது என்ற விபரம் இதுவரை எவருக்கும் தெரியாது. ஆனால் அதில் பெரிய தலைவர்கள் எவரும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்