முல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாக சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 05.04.18 மாலை குறித்த 73 அகவையுடைய வயோதிபரை கைதுசெய்துள்ளதுடன் 08 அகவை சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவ மனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவருடன் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான வயோதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்