புலனாய்வு பிரிவு மூலம் டெலோவை மிரட்டும் செல்வம்!

தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) மத்திய குழு உறுப்பினர்களை இராணுவ புலனாய்வு பிரிவினை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அச்சுறுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

அதேவேளை செல்வம் அடைக்கலநாதனை ரெலோ மத்திய குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரெலோவில் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு நினைத்தபடி எல்லாவற்றையும் தனது சுயநல அடிப்படையில் தீர்மானித்துவருகின்றார்.இலஞ்சத்துக்கு இயக்கத்தில் தம் உயிரை அர்ப்ணித்தவர்களை மறந்து எல்லாவற்றையும் செய்து விட்டு ரெலோவின் முடிவு என வெளியே கூறுகின்றார் எனவும் மத்திய குழு தெரிவித்துள்ளது.
அவ்வகையில் ரெலோ மத்திய குழு உறுப்பினர்களை செல்வம் இலங்கை புலனாய்வு ஊடாக மிரட்டுவதாகவும் செல்வம் மத்திய குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதில்லை என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே டெலோ அமைப்பில் தலைமையென எவருமற்ற சூழலே காணப்படுவதுடன் ஆளாளுக்கு எடுக்கும் முடிவுகளை மறுதரப்பு புறக்கணிப்பதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக சிவாஜிலிங்கம் ,சிறீகாந்தா,செல்வம் என பல பிரிவுகளாக தன்னிச்சையாக செயற்படுவதாக மேலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்