கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் வெளிவராத தகவல்கள்!

முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்ற சிலர், காவலரண் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக் காவலரண் விடுதலைபுலிகளின் காவலரண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள்!

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கோப்பாப்புலவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி படையெடுத்த இலங்கை இராணுவத்தை, இப்பகுதியில் தடுத்து நிறுத்தி விடுதலைபுலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கு நடைபெற்ற யுத்தத்தில் 12 விடுதலைபுலிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவ் நிலத்தடி காவலரணில் விடுதலைபுலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான, சாள்ஸ் அன்ரனியின் கட்டளை தளபதி தங்கியிருந்து கட்டளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்