ரணிலிடம் முடியாது என்ற மைத்திரி!

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கோரிக்கை ஜனாதிபதியினால் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு மறுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் இதில் அதிருப்தியடைந்துள்ள போதிலும், குறித்த நபர்களுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க சமரச முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை, தாம் விலகுவதாக இருந்தால் அதற்கான உத்தரவை ஜனாதிபதி தர வேண்டும் என எஸ்.பி., அநுர பிரியதர்சன யாப்பா, டிலான் பெரேரா ஆகியோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்