மோடியின் வருகைக்கு எதிர்ப்பு- தீக்குளித்த இளைஞன்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகைக்கு அனைத்து கட்சியினரும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டு சுவரில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – என்று எழுதி வைத்து விட்டு இன்று அதிகாலை 2.45 மணிக்கு தீக்குளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இளைஞன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வானூர்தி
நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவிடந்தை நடைபெறவுள்ள இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு மோடி இன்று சென்னைக்கு வருகிறார். இதற்கிடையே, மோடியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன்,
கறுப்பு பலூன்களையும் பறக்க விட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, தலைமை அமைச்சர் மோடி டில்லியில் இன்று காலை 6.40 மணி அளவில் தனி வானூர ்தியில் புறப்பட்டு காலை 9.36மணிக்கு சென்னை பழைய வானூர்தி நிலையம் வந்தடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்