அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில்

வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார்? அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அடுத்த தேர்தலில் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களிடம் வினாவிய பொழுது அவர் தெரிவிக்கையில்….

கூட்டமைப்பிலுள்ள 04 கட்சிகளும் குறிப்பாக திரு. ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து நான் முதலமைச்சராக வர வேண்டும் என தீர்மானம் எடுத்திருந்தனர். அனால் என்னுடைய நிலைப்பாடு வேறையாக காணப்பட்டது. தமிழ் மக்களின் கண்ணீருக்கும் அவர்களின் பிரச்சனைக்கும் ஒரு தீர்வினை பெறக்கூடியவரை முதலைமைச்சராக நியமிக்க வேண்டும் என்பதை நான் வரவேற்றுள்ளேன்.

நாட்டில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறை ஆட்சியை எங்கள் பிரதேசத்தில் பிரயோகித்திருந்தனர். அப்போது நாங்கள் எல்லோரும் மஹிந்தவிற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடுகின்ற திட்டத்தை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது.

திரு. விக்னேஸ்வரன் அவர்களின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கின்றோம். சுமந்திரன் அவர்கள் கூறிய விடயம் உண்மை. இரண்டு வருடத்துக்கு மட்டும் முதலமைச்சராக இருப்பதாக கட்சியில் எல்லோரும் முன் கூறியிருந்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சராக யார் போட்டியிட வேண்டும் என்பதனை தேர்தல் வரும் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும் என்பதனை தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்