சம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு!

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்தில் அமரவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது.

இந்தநிலையில் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஒன்றிணைந்த எதிரணியில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்நிமித்தம், தற்போதைய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையை முன்வைக்க தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்