நெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு!

நெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி கூட்டு தொடர்கின்ற நிலையில் நெடுந்தீவில் ஈபிடிபி முதுகில் குத்தி கூட்டமைப்பு கதிரையேறியிருந்தது.இது டக்ளஸிற்கு கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இதனால் ஏனைய உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது பற்றி பரிசீலிக்கவுள்ளதாக கட்சியினுள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசசபை கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரட்ணமே காரணமெனவும் தமிழரசுக்கட்சியினை பொறுத்த வரையில் நெடுந்தீவை ஈபிடிபிக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருந்ததாகவும் புதிய விளக்கமளித்துள்ளனர்.

வவுனியா நகரசபையினை கைப்பற்ற ஈபிடிபி ஆதரவு சத்தியலிங்கம் தரப்பிற்கு தேவைப்படுவதால் டெலோ வசமுள்ள நெடுந்தீவு பிரதேசசபையினை தாரை வார்க்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க யாழ் மாவட்டத்தில் பல சபைகளை ஆட்சியமைக்க நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவை வெளியிலிருந்து வழங்கியிருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாம் ஆதரவு வழங்கியுள்ளதானது மக்கள் நலன்சார்ந்த விடயத்தை முன்னிறுத்தியதாகும்.

யாழ்மாவட்டத்தின் பல சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் மக்களுக்கு சேவையாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம் என்றதன் அடிப்படையில் ஆட்சியமைப்பவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைப்பதற்காகவே நாம் வெளியிலிருந்து ஆதரவை வழங்கியிருக்கின்றோம்.
ஆனாலும் குறித்த சபைகளை நாமும் மக்களும் எதிர்பார்த்தது போல ஆட்சி செய்பவர்கள் செயற்படுத்தாது போனால் அதனை எதிர்த்து போராடவும் நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன்
பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு
சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது

About இலக்கியன்

மறுமொழி இடவும்