காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை: சித்தார்த்தன்

ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில், எந்தவிதமான முன்னேற்றங்களும் இன்றி அரசாங்கம் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெறுமனே அரசாங்கத்தை கண்டிப்பதால் நடக்கப் போவது ஒன்றுமில்லையெனக் குறிப்பிட்ட சித்தார்த்தன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சிந்திக்கும் நிலைக்குச் சென்றுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதியொருவர், காணாமல் போனவர்கள் தடுப்பு முகாம்களில் சுயநினைவின்றி காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இவ்விடயத்தை சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், அரசாங்கம் இது குறித்து பேசாமல் இருப்பது கண்டித்தக்கதென்றும், இவ்விடயத்தின் அடிப்படையில் விரைவில் கலந்துரையாடி காத்திரமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்