யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம்?

யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

தூய நகர திட்டத்தை நோக்கி பயணிப்பதுக்கு இராணுவ ஆளணியினை தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதியளித்ததாக யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் இன்று ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் யாழ். மாநகர மேயர் ஆனோல்ட்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கழிவகற்றல் பொறிமுறை ஒன்று உருவாக்குமாறும் அதனை செயற்படுத்த தனது ஒத்துழைப்பை தருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் இராணுவத்தினரை உள்ளீர்க்கலாம் எனவும், இராணுவத்தினரும் மக்களுக்கான பணியினையே மேற்கொள்கின்றனர் எனவும் ஒற்றுமையாக நாம் இத்திட்டத்தை கொண்டு நடாத்தவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்ததாகவும் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழில் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னத்தை நிலைநிறுத்த மக்களது சேவைகளில் படையினர் தொடர்புபட்டுள்ளதாக காண்பிக்க முயற்சிகள் நடந்துவருகின்றது.
இந்நிலையில் அரச சிவில் நிர்வாக கட்டமைப்பினை தாண்டி இராணுவத்தை நுழைக்க முற்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்
வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்