அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்! வெளியேற்றிய முதல்வர்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார்.

அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர்.
ஒரு புனித இடமாக கருதப்படும் அன்னை பூபதியின் சமாதிப்பகுதியில் பொலிஸார் பாதணிகளுடன் நின்றது தொடர்பில் அங்கு நின்ற பலரும் தமது அதிர்ப்தியை தெரிவித்திருந்தனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்