28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்

14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா

120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்