கூட்டமைப்புடன் இணையத்தயார்: சுரேஷ்

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்புக்கு என யாப்பொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க முடியும். அதுவரை இணைய மாட்டோம் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைய விரும்பினால் அதனை நாம் பரிசீலிக்கத் தயார் எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கூட்டமைப்புக்கு என்று யாப்பொன்று உருவாக்கப்படவேண்டும். கலந்துரையாடல்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு வழிசமைப்பதாக அது இருக்க வேண்டும்.

அப்போதுதான் கூட்டமைப்பிலுள்ள அனைத்து தரப்பும் ஒருமித்துச் செயற்படுவது தொடர்பாக ஆராயமுடியும்.

நாம் பல தடவைகள் வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாப்பை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் இந்த இரண்டு விடயங்களிலும் தீர்க்கமான முடிவை கூட்டமைப்பு எடுத்தால் மட்டுமே இணைவு குறித்து நாம் பரிசீலிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்