கேப்பாபுலவில் சிறீலங்கா இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கி மாயம்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையினர் விமான தளத்தினை சுற்றி பாரிய பகுதிகளில் காவலரண்கள் அமைத்துள்ளார்கள் கடந்த 06.05.18 அன்று காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து விமான படையினர் தேடுதல் நடத்தி பலனளிக்காத நிலையில் முள்ளியவளை சிறிலங்கா காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள் இன்னிலையில் 07.05.18 அன்று சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ,சிறிலங்கா படையினர் விமானப்படையினர் என பெருமளவான சிறிலங்கா படையினர்கள் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த தேடுதல் நடவடிக்கை அருகில் உள்ள காட்டுப்பகுகளில் மற்றும் வாவெட்டிகுளம், நந்திக்குளம்,போன்ற பகுதிகளிலும் தொடர்சியான தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்