தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மனியில் 3 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி நேற்றைய தினம் காலை Osnabrück தலைமை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கான எடுத்துரைத்தல் இடம்பெற்றது. அத்தோடு மாலை நேரம் 101 வது யேர்மன் கத்தோலிக்க நாள் நடைபெறுகின்ற Münster நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய வீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேரவலத்தை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நேற்றைய தினம் பிராங்போர்ட் நகரத்திலும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் அமைதி நாடகத்தின் ஊடாக கவனத்தை ஈர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 வது நாளாக இன்றைய தினம் காலை டோர்ட்முண்ட் நகர மத்தியிலும் மாலை நேரம் Essen நகரத்திலும் கவனயீர்ப்பு கண்காட்சிக்கு நடைபெறும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்