புலம்பெயர் தேசங்களிலும் ஒற்றுமை தேவை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம்” என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம்.

எதிர்வரும் 18 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள்
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*