பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை- பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள Boothroyd Room,இல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தமிழ் மக்களுக்கான தமது தோழமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தவுள்ளனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, நிழல் அதிபர் ஜோன் மக் டோனல், நிழல் சுகாதார அமைச்சர் ஜொனாத்தன் அஸ்வோர்த், நிழல் அனைத்துலக அமைச்சர் பாரி கார்டினர், நிழல் வெளிவிவகார அமைச்சர் பாபியன் ஹமில்டன், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்