ஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம்! – துப்பாக்கி சூடு ஒருவர் பலி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போராட்டங்களால், பற்றி எரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கல்வீச்சின் மூலம், ஆட்சியர் அலுவலகமே சூறையாடப்பட்டது.

போராட்டக்காரர்கள் ஆவேசத்தை பார்த்த, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் மக்களை விரட்டினர்.

அப்போது கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவியது. விரட்டியடிக்கப்படும் போராட்டக்காரர்கள் மீண்டும், திரும்பி வந்து தாக்குவதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

About காண்டீபன்

மறுமொழி இடவும்