அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு! – நாம் தமிழர் கட்சி கண்டனம்.

ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும் நடத்தியதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாகியிருப்பதாக வரும் செய்தி சொல்லொண்ணா துயரத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிறது.

தூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் கேட்டினை பிழைத்து வருகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். கடந்த நூறு நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுகின்ற போராட்டத்தை அறிவித்து இருந்தார்கள். மக்களின் போராட்டத்தை தனது அதிகார பலம் கொண்டு அடக்கி விடலாம் என்ற தனது சர்வாதிகார மனப்பாங்கு மூலம் நினைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கு தனது ஒற்றுமையான கடுமையான போராட்டத்தின் மூலமாக அம்மக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வக்கற்ற தமிழக அரசும் அதன் காவல்துறையும் சனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி நான்கு உயிர்களை கொலை செய்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருகின்ற செய்திகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. இன்று நடந்த உயிர் அந்த உயிர் பணிகளுக்கும் அங்கு காயம்பட்டவர்களின் அவல நிலைகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்கள் போராட்டத்தை தனது அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்கின்ற தமிழக அரசின் சர்வாதிகார மனநிலைக்கு தமிழக மக்கள் தங்களது போராட்ட பதிலடியால் தக்க மறுமொழி அளிப்பார்கள். மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி அரசுக்கு பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக இன்று நான் உயிரை காவு வாங்கி இருப்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது .தமிழகத்திலேயே பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்க நினைப்பதும் பொய் வழக்குகள் போட்டு தக்க நினைப்பதும் தமிழக அரசின் பாசிச குண இயல்புகளை காட்டுகிறது. எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக அரசின் சர்வாதிகார இந் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது .

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்
நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல்
சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும்

About இலக்கியன்

1 comments

சரி தமிழர்களை பார்ப்பன இந்தியா முள்ளிவாய்க்கால் முதல் இன்றுவரை அழிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களுக்கு நீங்கள் இந்தியாவில் அல்லது ஈழத்தில் இருக்குறீர்களா என்பது பிரச்சனை இல்லை. நீங்கள் அழிய வேண்டும். இதெற்கென்ன தீர்வு? சிங்களந்தான் வழிகாட்டி. சிங்களன் முழுவதுமாக புத்தமதம் மாறினான். புத்த நாடுகள் காக்கிறது. தன்னில் இருக்கும் கிறிஸ்துவரை, கிறிஸ்துவ நாடுகள் வரும்போது சிங்களன் அனைவரும் கிறிஸ்துவர்கள் என்று காட்ட வேண்டியது. தமிழ் முஸ்லிம்களை , தமிழ் ஹிந்துக்கள் பகை இருப்பதுபோல உருவாக்கி, முஸ்லீம் நாட்டு பிரதிநிதிகள் வரும்போது தமிழ் முஸ்லிம்களை உயர்த்தி காட்ட வேண்டியது. இப்போ தமிழர்களை 27 நாடுகள் கொல்ல தயாராய் வரும். இதற்க்கு தலைமை தாங்குவது யூதனும் பார்ப்பானும். அத்தனை தமிழர்களும் முஸ்லிமாகவோ கிறிஸ்துவாகவோ மாற போகிறோம் என்று இந்தியாவை மிரட்டவேண்டும். அப்போதுதான் இந்த அழிவுகள் நிற்கும். ஈழத்தில் எல்லோரும் ஹிந்து தமிழர்கள். காக்க வேண்டிய இந்தியா தானே கொன்றது? பைத்தியக்காரனுங்க மாதிரி நான் சொல்வதை எதிர்க்க வேண்டாம். இந்த சாவுகள், முள்ளிவாய்க்கால் சாவுகள் உங்களுக்கு புரிய வைத்து இருக்கவேண்டும் உங்கள் மக்கு மண்டைக்கு. வேறு வழி இல்லை. இந்தியாவிடம் ஆயுதம் இருக்கு. நம்மிடம் இல்லை. வைத்திருந்த பிரபாகரனை தீவிரவாதி என்று இந்த உலகம் ஒழித்தது. கிறிஸ்துவராக , இஸ்லாமியராக மாற போகிறோம்ன்னு , ஹிந்துக்கள் எங்களை கொல்லுவதில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்பது தான் இந்தியாவின் பிடியில் இருந்து தப்ப வழி. கிறிஸ்துவம் என்றால் மிகவும் நல்லது. காஷ்மீர் , Syria, Iraq இஸ்லாமியர்கள் தானே. தப்பவில்லை. அப்போ கிறிஸ்துவம்ன்னு சொல்றதுதான் மதம் மாறுவதுதான் தீர்வு. மூளை முதல் நிலம் வரை எதுவுமே இல்லாத எங்கிருந்தோ வந்த சிங்களன் வாழ்கிறான். எல்லாம் இருந்தும் தமிழர்கள் சாகிறோம். ஹிந்து இந்தியாவுக்கு நம்மை பிடிக்காது. கிறிஸ்துவம் ஆகிறேன்.

மறுமொழி இடவும்

*