எப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா!

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருடனான பேச்சு வார்த்தையை திடீரென ரத்து செய்வதாக அறிவித்தபின் முதன்முறையாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனை நடத்தும் இடம் ஒன்றைத் தகர்க்கும் வீடியோவும் புகைப்படங்களும் வெளியான நிலையில் ஜூன் 12-இல் நடக்க இருந்த சந்திப்பு ரத்தானதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வட கொரியா அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை இன்னும் விரும்புவதாகவும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல் அமெரிக்காவுடனான வட கொரியாவின் பேச்சு வார்த்தையை பெரிதும் எதிர்பார்த்த தென் கொரியாவும் பேச்சு வார்த்தை ரத்தானது குறித்து தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

வட கொரியா சமீபத்தில் வெறுப்பை வெளிப்படையாக வெளிக்காட்டும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க அதிபர் பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தார்.

தற்போதைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருந்தாலும் பிறிதொரு நாளில் ஒரு வேளை பேச்சு வார்த்தை நடக்கலாம் என்றும், யாரும் கவலைப்படவேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து
சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்

About இலக்கியன்

மறுமொழி இடவும்