மாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்

பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில், புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது. எமது கட்சிசார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நா டாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்.

நேற்று கூட்டம் நடைபெற்றது. ஆயினும் காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்பவேண்டியிருந்ததால் நேற்றய கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை. ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும்போது பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது. ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது என்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை
வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார்? அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக
மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்