யாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்!

இலங்கை இராணுவத்தினருக்கு யாழ்.மாநகரசபையின் சிவில் வேலைகளில் பங்கு கொடுப்பதாக ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு வழங்கிய உறுதி மொழியை யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் நிறைவேற்றியுள்ளார்.

மாநகரசபைக்குள் மரம் நடுவதற்காக குழிகளை வெட்டும் பணிக்கு , மாநகர பணியாளர்களை புறம் தள்ளி, சிறிலங்கா இராணுவத்தை ஈடுபடுத்த முதல்வர் ஆர்னோல்ட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தான் பதவி ஏற்றவுடன், ஆளுநரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அந்த சந்திப்பின் போது, இராணுவத்தை மாநகர சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி, இனப்படுகொலை இராணுவத்தின் இருப்பை அவசியமான ஒன்றாக மாற்றும் அரசின் திட்டதநர் முன்னதாக ஆமோதித்து இருந்தார்.

அவர் கொடுத்த வாக்கின் பிரகாரம் , தேசிய மரநடுகை நாளை முன்னிட்டு, மாநகர சபை அதிகார எல்லைக்குள் , ஆளுநரின் திட்டமிடலில் மரம் நாட்டுவதற்கான ஆரம்ப பணிகளில் இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தனது நிர்வாக எல்லைக்குள் நடக்க இருக்கும் சீரமைப்பு வேலைகளில் ஆளுநர் தலையிட்டு உத்தரவிடுவதை கை கட்டி வேடிக்கை பார்ப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

மக்கள் ஆணை பெற்ற மாநகர சபையின் நிர்வாகத்திற்துள் , ஒரு மத்திய அரச அதிகாரி தலையிட்டு ஆணை வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே இந்நடவடிக்கைகள் தொடர்பில் மாநகரசபை கதிரையிலிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் கண்டுகொள்ளாதிருப்பது ஏனென்ற கேள்வி எழுந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்