மிச்சம் மீதி உள்ளவர்களையும் சுட்டுக்கொல்லலாமா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுமார் 13 பேரை சுட்டுக்கொன்றது தமிழக அரசு. தமிழகத்தினை தாண்டியும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தமிழகத்தை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அப்பாவி மக்களை கொன்றொழித்த தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை தூத்துக்குடி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 99 நாட்களாக அவர்கள் போராடிக்கொண்டிருந்த போது சென்று சந்திக்காத ஓபிஎஸ், அம்மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த இயலாத ஓபிஎஸ், அசம்பாவிதம் நிகழ்ந்தே நேரில் செல்லாத ஓபிஎஸ் தற்போது அங்கு செல்வது, அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராடிய மக்களில் எவரேனும் மீதமுள்ளர்களா என கண்டறிந்து அவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிடவா என கேள்வியெழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். பதிலளிப்பாரா ஓபிஎஸ்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்