சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018!

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 22வது விளையாட்டுப் போட்டிகளானது 27.05.2018 மற்றும் 02.06.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் இவர்டோன் மைதானங்களில்; சிறப்பாக நடைபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.

எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியில்; உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகள், பார்வையாளர் போட்டிகள் போன்ற அனைத்து விதமான போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் பல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிமீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தொடர்டர்புடைய செய்திகள்
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரித்ததாக, 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சுவிஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*