முற்றுகைப்போராட்டமாம்:சுமந்திரனும் 25 ஆதரவாளர்களும்?

கொழும்பில் அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசை பாதுகாத்துக்கொண்டுமிருக்கின்ற தமிழரசு தனது அடுத்த நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளது.அவ்வகையில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் யாழ்.அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து போராட்டமொன்றை எம்.ஏ.சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தொடங்கியுள்ளனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி,தாழையடி,உடுத்துறை பகுதிகளில் வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை பிடிப்பை நிறுத்த வலியுறுத்தி யாழ். நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் முன்பதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெறுமனே சுமந்திரனின் ஆதரவாளர்கள் 25 பேர் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கின்ற போராட்டத்தை மீனவ அமைப்புக்கள் புறக்கணித்துவிட்டன.

எனினும் சுமந்திரனின் தீவிர விசுவாசிகளான வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவரால் கூட்டிவரப்பட்ட சிலர் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி அரியரட்ணம் மற்றும் புதிய ஆதரவாளர் நிரோஸ் என சிலரே ஊடகங்களின் புகைப்படப்பிடிப்பில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே தமது அரசியல் நகர்விற்காக தம்மை பலிக்கடா ஆக்கி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமென இதனை அடையாளப்படுத்தியுள்ள மீனவ அமைப்புக்கள் தாம் அதற்கு முண்டு கொடுக்கப்போவதில்லையனெ அறிவித்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்