மக்கள் பணத்தை வீணடிக்கும் மாகாணசபை?

வடமாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மாகாணசபை உறுப்பினர்களிற்கென ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 18 மில்லியன் நிதியை எவ்வாறு செலவு செய்வதென கண்டறியப்படவில்லையென முதலமைச்சர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டு தோறும் தலா ஆறு மில்லியன் நிதி ஒதுக்கப்படுவது வழமையாகும். அந்நிதியில் சிலர் யுத்த பாதிப்பிற்குள்ளான மக்களிற்கு உதவிகளை வழங்க பெரும்பாலானவர்கள் தமது அடுத்த தேர்தலில் வாக்குகளை அள்ள முதலிடுவது வழமையாகும்.அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே இவ்வாண்டில் 18 மில்லியன் நிதியை செலவு செய்ய உறுப்பினர்கள் முன்வில்லையென கூறப்படுகின்றது.

இதனிடையே அரசியலில் ஈடுபடும் போது இலாப நோக்கிற்காக பணம் சம்பாதிப்பது தவறான செயல் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள் மீது முறையான விசாரணைகளை நடத்தி, அவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தவறு இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அவ்வாறனதொரு செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்