தேசியத்தை சிதைக்க மதச்சண்டைகள்: முன்னணி எச்சரிக்கை!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை திட்டமிட்டு சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு சதி முயற்சியேயென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் மஸ்தானின் நியமனத்திற்கு முன்னணி தனது வன்மையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்த அரசு தமிழ் மக்களது அன்றாட பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் என அனைத்தையும் புறந்தள்ளி தற்போது மஸ்தானின் அமைச்சுப்பதவிக்காக போராட தமிழ் மக்களை தள்ளியுள்ளது.
தமிழ் மக்களை தமிழ் தேசிய அரசியல் நிலையில் புறந்தள்ள இந்த அரசு தனது தமிழின விரோத போக்கை உச்சத்தில் அமுல்படுத்திவருகின்றது.இத்தகைய சூழலில் தமிழ் தேசம் பேசாதிருக்காது தனக்கான அங்கீகாரத்தை போராட போராடும்.இதனையே இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.

உண்மையில் தமிழ் மக்களிடையே மதரீதியான பிளவை தோற்றுவிக்க அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்திவருகின்றது.அதன் ஒரு அங்கமாகவே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளதை பார்க்கவேண்டியிருக்கின்றது.
இத்தகைய நியமனத்தை சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையேயான பிளவை தோற்றுவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வடஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் இனது கலாச்சாரத்துடன் ஒரு கும்பல் சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை உருவாக்க பாடுபடுகின்றது.அதே போன்று அரசால் களமிறக்கப்பட்டுள்ள கடும்போக்கு கத்தோலிக்கர்கள் இன்னொரு புறம் சைவர்கள் மற்றும் கத்தோலிக்கர்களிடையே மோதல்களை தோற்றுவிக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.

இத்தகைய சதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்