எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்!

சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டன. இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை வெளியில் கொண்டு வர பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டேன். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

அவனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்