வேகமெடுக்கின்றது மாற்று தலைமை:தமிழரசு உசாராகின்றது!

வடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (16) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை பலப்படுத்தவுள்ளோமென தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் மாற்று அரசியல் தலைமைக்கான நகர்வுகள் வேகம் பிடித்துள்ளன.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியென பல தரப்புக்களும் கைகோர்க்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே தமிழரசிற்;கு புத்துயிர் ஊட்ட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்