பொறுப்புக்கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை – ஜ.நா செயலர்

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்.

நோர்வேயில் நடந்த நிகழ்வு ஒன்றின் போது சிறிலங்காவில் நீதியை நிறைநாட்ட ஐ.நா தவறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு. எனவே, சிறிலங்காவில் என்ன நடந்தது என்பதற்கு இலங்கையர்களே பொறுப்புக்கூற வேண்டும். அதனை அங்கீகரிப்பது முக்கியமானது.

சிறிலங்காவில் போரை எதிர்கொள்வதற்கான வளங்களை ஐ.நா கொண்டிருக்கவில்லை.

ஐ.நாவின் தவறுகள் அடையாளம் காணப்பட்டு, தற்போது ஐ.நா முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்