அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதில்லை என விஜயகலா அறிவிப்பு

அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.

விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,

“இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும்.

எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை.

நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
என்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்ற்ததில் வழக்குத் தொடரவுள்ளேன் என்று
தேர்தல் மேடைகளில் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் பற்றிக் கதைப்பதற்கோ தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கோ பின்னடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்
விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*