நானே என்றும் அவைத்தலைவர்:சீ.வீ.கே பதிலளிப்பு!

வடமாகாணசபையின் அவைத் தலைவர் பதவியில் இருப்பது அல்ல தற்போதைய பிரச்சனை. உண்மையில் தற்போதைய பிரச்சனையானது அமைச்சர் சபை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதேயென சீ.வீ.கே.சிவஞானம் தனது கட்சி ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.அத்துடன் வடக்கு மாகாண சபை நிறைவு நாளான ஒக்டோபர் 25 வரை மட்டுமல்ல அதை தாண்டிய காலத்திலும் நானே அவைத்தலைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய குழப்பங்களிற்கு பிரதான காரணம் ஆளுநர் அரச வர்த்தமானியில் முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே என முதலமைச்சர் நேற்று தெளிவுபடுத்தியிருந்தார்.வடமாகாணசபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்;டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காதெனவும் அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண சபையும் அமைச்சர் வாரியமும் ஒக்டோபர் 25ம் திகதிவரை மட்டுமே செயல்பட முடியும் . ஆனால் அவைத் தலைவர் அதையும் தாண்டிய காலத்திலும் குறிப்பாக அடுத்த மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் வரையிலும் நானே அவைத்தலைவர் எனவும் சீ.வீ.கே தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்